பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் ‘ஹாய்’ திரைப்படம் சமீபத்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் கவின், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆனால் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரவி வரும் தகவலின்படி, திட்டமிட்ட தேதியில் படம் வெளியாகாமல் போகலாம் என கூறப்படுகிறது. அதே நாளில் சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ மற்றும் விஷாலின் ‘மகுடம்’ ஆகிய படங்கள் வெளியாக இருப்பதால், நேரடி போட்டியைத் தவிர்க்க தயாரிப்புக் குழு ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோவும் ரவுடி பிக்சர்ஸும் இணைந்து தயாரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
