மணிரத்னம் புதிய படத்தின் கதை இதுதானா? வெளியான புது தகவல்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் சாய்பல்லவி இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. அதிகாரப்பூர்வ தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாத இந்தப் படம், முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்ட கதையாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

மணிரத்னத்தின் வழக்கமான உணர்ச்சி கலந்த கதை சொல்லும் பாணியில், இந்தப் படம் வித்தியாசமான அணுகுமுறையுடன் உருவாகி வருகிறதாம். இதற்கிடையில், இது ஹாலிவுட்டில் 2011-ல் வெளியான ‘Crazy, Stupid, Love’ திரைப்படத்தின் தழுவல் என்ற தகவல் உலாவுகிறது.

அந்தப் படத்தில் நடுத்தர வயதான ஒருவரின் திருமண வாழ்க்கை சிக்கலில் சிக்கி, பின்னர் ஒரு இளைஞரின் உதவியால் அவர் தனது வாழ்க்கையை மாற்றிக் கொள்வது கதையின் மையமாக இருந்தது. தற்போது விஜய்சேதுபதி அந்தக் கதாபாத்திரத்திலும், சாய்பல்லவி அவரது மனைவியாகவும் நடித்திருப்பதாக பேசப்படுகிறது.மேலும், அந்த இளைஞர் கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார் என்பது தற்போது சஸ்பென்ஸாக வைத்திருக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனினும், இந்த தகவல்கள் குறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading