மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ – என்ன சொல்ல வருகிறது?

‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து அடுத்த படைப்பாக ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தை அறிவித்துள்ளன. இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம், கண்ணியமாக வாழ விரும்பும் ஒரு சாதாரண மனிதனின் போராட்டத்தை மையமாகக் கொண்டுள்ளது.

ஊழல் நிறைந்த அமைப்பில் சரணடைவதா அல்லது எதிர்த்து நிற்பதா என்ற இரு வழிகளில் சிக்கிக்கொள்ளும் மனிதனின் கதையாக இது உருவாகியுள்ளது. இப்படத்தில் கே. மணிகண்டன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய்முருகன், சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, லல்லு உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரதீபன் செல்வரத்தினம் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.இந்தப் படம் குறித்து பேசிய மணிகண்டன், கலாச்சார மற்றும் இன மோதல்களை மையமாகக் கொண்ட தனித்துவமான ஆக்‌ஷன் டிராமாவாக இது இருக்கும் என்றும், கதையின் நேர்மையும் புதுமையும் தன்னை உடனே கவர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். “இது எங்கள் அனைவரின் கனவு படம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading