கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ள புதிய வெப் தொடர் ‘அக்கா’. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த தொடரை அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். ஒய்ஆர்எஃப் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
தன்வி ஆஸ்மி மற்றும் அன்ஷுமான் புஷ்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வரும் இந்த தொடருக்கான அறிவிப்பு கடந்த 2023 நவம்பரில் வெளியானது. தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் முதல் போஸ்டரும் வெளியாகியிருந்தது.
1980-களின் பின்னணியில், பெர்னூர் என்ற கற்பனை ஊரை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண் ஆதிக்கம் கொண்ட சமூகத்தின் பின்னணியில் இந்த திரில்லர் கதை நகரும் என கூறப்படுகிறது. இந்நிலையில், ‘அக்கா’ வெப் தொடர் வரும் அக்டோபர் 30-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
