இயக்குநர் ரவீந்தரா புள்ளே இயக்கும் ‘மைசா’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை ராஷ்மிகா மந்தனா காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் அவர் போர் வீராங்கனை போன்ற அதிரடி கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அன்பார்முலா பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படப்பிடிப்பு தற்போது கேரளாவின் அதிரப்பள்ளி காட்டுப்பகுதியில் நடைபெற்று வருகிறது.
அங்கு படமாக்கப்பட்ட ஒரு காட்சியின் போது ராஷ்மிகா தவறி கீழே விழுந்ததாகவும், அவருக்கு இடுப்பு மற்றும் தொடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முழுமையாக குணமடைய குறைந்தது 6 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் ‘மைசா’ படத்தில், கோண்டு இனத்தைச் சேர்ந்த பெண்ணாக ராஷ்மிகா நடித்துவருகிறார். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்திற்காக அவர் சமீபத்தில் நீருக்கடிக் காட்சிகள் மற்றும் முக்கிய சண்டைக் காட்சிகளை முடித்திருந்தார். அதன் பின்னர் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
