பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது சாப்பாட்டு நேரத்தில் ஒரு வித்தியாசமான பழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார் என்று, சமீபத்திய பேட்டியில் திரைப்பட தயாரிப்பாளர் சைலேந்திர சிங் புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, சல்மான் கான் எப்போது சாப்பிட அமர்ந்தாலும், தனக்கு எதிரில் உள்ள கண்ணாடியில் தன்னை பார்த்துக்கொண்டே சாப்பிடுவாராம். அந்த நேரத்தில் அருகில் யாராவது இருந்தாலும் கூட, அவர்களையும் கண்ணாடி வழியாக பார்த்தபடியே பேசி பதிலளிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
Add a Comment
