சிறிய பட்ஜெட்டில் உருவாகி மலைப் போல் வசூலை குவிக்கும் ‘ஹனுமான் அன்ஷ்’ திரைப்படம்!

விஷால் சதுர்வேதி எழுதி இயக்கிய பாலிவுட் திரைப்படம் ‘ஹனுமான் அன்ஷ்’, கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பக்தர்களால் ஆன்மிக குருவாக போற்றப்படும் நீம் கரோலி பாபாவின் வாழ்க்கை, தத்துவம் மற்றும் ஆன்மிக போதனைகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஷோபினாவ் சத்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சுமார் ரூ.2 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படத்திற்கு ஆரம்ப நாட்களில் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பு கிடைக்கவில்லை. முதல் வாரத்தில் ரூ.1.08 கோடியும், இரண்டாவது வாரத்தில் ரூ.40 லட்சமும் மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் மூன்றாவது வாரம் முதல் படத்தின் வசூல் வேகம் அதிகரிக்கத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இதுவரை ‘ஹனுமான் அன்ஷ்’ திரைப்படம் ரூ.316 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் ரூ.400 கோடியை படம் நெருங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வெறும் ரூ.2 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம், அதன் முதலீட்டுடன் ஒப்பிடும்போது 150 மடங்குக்கும் அதிகமான வசூலை பெற்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் மந்தமாக தொடங்கிய படம், ரசிகர்களின் ஆதரவால் அடுத்தடுத்த வாரங்களில் எதிர்பாராத அளவுக்கு வசூலை அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply