கத்ரீனா கைஃபின் உடல் தோற்றத்தை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகை ரம்யா அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார். பெண்களை உருவக்கேலி செய்வதும், உடல் எடையை வைத்து விமர்சிப்பதும் தவறு என அவர் தெரிவித்துள்ளார். தாய்மைக்கு பிறகு உடல் எடை அதிகரிப்பது இயல்பானது என்றும், ஒருவரின் தோற்றத்தை வைத்து கேலி செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Add a Comment
