‘தி பாரடைஸ்’ படத்திற்காக 160 நாட்கள் நீண்ட தலைமுடியை வளர்த்து சடை பின்னி நடித்ததாக நானி தெரிவித்துள்ளார். தலைமுடியை பராமரிப்பது மிகவும் சிரமமாக இருந்ததாக கூறிய அவர், பெண்கள் வாழ்நாள் முழுவதும் கூந்தலை பராமரிப்பதை நினைத்து அவர்கள்மீது தனி மரியாதை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். ஹீரோவின் சடை தோற்றத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் இருந்தாலும், தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
Add a Comment
