தமிழக முதல்வரும் நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சுதீப் கிஷன் கதையின் நாயகனாக நடித்துள்ளார். எஸ். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலானது.
இந்த நிலையில், ‘சிக்மா’ படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ஜேசன் சஞ்சய், தனது தாயாருக்கும், தனது தந்தையான தமிழக முதல்வர் விஜய்க்கும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தனது தங்கை திவ்யா சாஷாவுக்கும் நன்றி கூறினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் சூரி, ஜேசன் சஞ்சய் தனக்கு ‘சிக்மா’ படத்தின் கதையை சுமார் இரண்டரை மணி நேரம் தொடர்ந்து விவரித்ததாக தெரிவித்தார். அவர் கதை சொன்ன விதம், முதல்வர் விஜய்யுடன் பேசியது போன்ற உணர்வை தனக்கு ஏற்படுத்தியதாகவும், ஜேசன் சஞ்சய் இயக்குநராக வெற்றி பெற வேண்டும் என்றும் கூறினார். மேலும், எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் அவர் கதாநாயகனாகவும் நடிக்க வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்த சூரி, ‘சிக்மா’ மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
