அதிரடி அவதாரத்தில் நடிகர் கார்த்தி… மிரட்டும் எஸ்ஜே.சூர்யா… வெளியானது ‘சர்தார் 2’ டீசர்!

நடிகர் கார்த்தியின் வெற்றிப் படங்களில் ஒன்றான ‘சர்தார்’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகி வரும் ‘சர்தார் 2’ தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கும் இந்தப் படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக வீடியோ ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. தற்போது படத்தின் டீசரும் வெளியாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள சர்தார் 2 டீசரில் அதிரடி காட்சிகள், உளவு பின்னணி மற்றும் விறுவிறுப்பான காட்சியமைப்புகள் இடம்பெற்றுள்ளதால், படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்துள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading