மலையாளத்தில் ‘பூவன்’ படத்தின் மூலம் அறிமுகமான அனிஷ்மா, தமிழில் ‘சிறை’ மற்றும் ‘யூத்’ திரைப்படங்களுக்குப் பிறகு தொடர்ந்து கவனம் பெற்று வருகிறார். தற்போது அவர் நடித்துள்ள புதிய தமிழ் படம் ‘மொத ராத்திரி’.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ராஜா கருப்பசாமி இயக்கியுள்ளார். ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், இசையை பரத் ஷங்கர் அமைத்துள்ளார். புதிதாக திருமணமான தம்பதியரின் வாழ்க்கையை நகைச்சுவையுடன் சொல்லும் காதல் படமாக இது உருவாகி வருகிறது.
படப்பிடிப்பு ஏற்கெனவே நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட பின்னணி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இசை வெளியீட்டு விழா, டிரெய்லர் வெளியீடு மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஜோடியின் தோற்றம் மற்றும் போஸ்டரின் காதல்-நகைச்சுவை உணர்வு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
