சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், சுஹானா கான், தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கிங்’. இப்படம் டிசம்பர் 24-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமை விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை எந்தவொரு இந்தியத் திரைப்படமும் விற்பனையாகாத அளவுக்கு அதிக விலையாக ரூ.175 கோடிக்கு ‘கிங்’ படத்தின் வெளிநாட்டு உரிமை விற்பனையாகியுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Add a Comment
