‘சிட்டா’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் ஆராத்யா சாய்!

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த மாடல் அழகியான ஆராத்யா சாய், தற்போது நடிகையாகத் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். ‘பின்னில் ஓராள்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், ‘வாழ 2’ படத்தின் மூலம் கவனம் பெற்றார். தற்போது ‘சிட்டா’ என்ற திரைப்படத்தின் வாயிலாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இப்படத்தின் மூலம் சிபி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆதியா பிரசாத், பாலசரவணன், மூர்த்தி, மதுமிதா, அருவி மதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வாசுதேவன் ஒளிப்பதிவு செய்ய, டிசி இசையமைத்துள்ளார். ‘விருத்தாச்சலம்’ படத்தைத் தயாரித்த செந்தில் முருகன், லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் பாலு நாராயணன் கூறுகையில், கிராம நிர்வாக அலுவலகத்தைச் சுற்றி நடைபெறும் சம்பவங்களே கதையின் மையம் எனத் தெரிவித்துள்ளார். ஒரு சாதாரண மனிதர் தனது தேவைக்காக நிலத்தின் அடங்கல், பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களைப் பெறுவதற்கு எதிர்கொள்ளும் சிரமங்களையும், அதன் பின்னணியில் இருக்கும் மக்களின் வாழ்வியலையும் இப்படத்தில் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply