100 நாட்டுப்புற இசைக் கலைஞர்களின் பங்களிப்பில் உருவான ‘எல்லம்மா’ படத்தின் பிரம்மாண்ட பாடல்!

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘எல்லம்மா’. ‘பலாகம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் வேணு எல்தண்டி இப்படத்தை இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பதுடன், தேவிஸ்ரீ பிரசாத்தே நாயகனாகவும் நடிக்கிறார். எல்லம்மா என்பது காவல் தெய்வத்தின் பெயர் என்பதால், அதன் பின்னணியில் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்திற்கான டைட்டில் பாடலை இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த 100 பாரம்பரிய நாட்டுப்புற இசைக் கலைஞர்களுடன் இணைந்து தேவிஸ்ரீ பிரசாத் பதிவு செய்துள்ளார். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்பாடல் விரைவில் வெளியாக உள்ளது.

தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகும் ‘எல்லம்மா’ திரைப்படம் 2027-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply