கடந்த 2004ம் ஆண்டில் சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த ‘கிரி’ படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் இணைந்து ‘வீரபாகு’ என்கிற கதாபாத்திரத்தில் வடிவேலு கலக்கி இருப்பார். தற்போது இந்த ‘வீரபாகு’ கதாபாத்திரத்தை ஹீரோவாக வைத்து ஒரு அறிமுக இயக்குனர் ஒரு கதையை தயார் செய்து வடிவேலுவை அணுகி கூறியுள்ளாராம். இந்த கதை வடிவேலுவிற்கு பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இதனைத படமாக்கும் முயற்சியில் அந்த இயக்குனர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நோக்கி நகர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Add a Comment
