கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘தி ஒடிசி’ கடந்த வாரம் ஜூலை 17ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தியாவிலும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பும் முன்பதிவும் பெரியளவில் இருந்தது.இந்தபடம் வெளியான முதல் வார இறுதியில் இப்படம் உலக அளவில் 264 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 2546 கோடி. கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் இதுவரையில் வெளியான படங்களில் முதல் வார இறுதி வசூலில் முதலிடத்தில் இருந்த “தி டார்க் நைட் ரைசஸ்” படத்தின் வசூலை இந்தப் படம் முறியடித்துள்ளது.
Add a Comment
