ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‛ஜெயிலர் 2″. இதன் முதல் பாகமான ஜெயிலர் பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அக்டோபர் 15-ல் திரைக்கு வரும் இப்படத்தின் வியாபாரம் தொடங்கியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரஜினிகாந்திற்கு இருக்கும் மார்க்கெட்டை மனதில் வைத்து, இப்படத்தின் தயாரிப்பாளர்கள் தெலுங்கு தியேட்டர் உரிமத்திற்கு 60 கோடி ரூபாய் வரை கேட்பதாகக் கூறப்படுகிறது.
Add a Comment
