ரசிகர்களின் அன்பே என் மிகப்பெரிய பலம்… மனம் திறந்த ஸ்ரீலீலா!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் பிறந்து, பெங்களூருவில் வளர்ந்த நடிகை ஸ்ரீலீலா, 2019-ஆம் ஆண்டு வெளியான ‘கிஸ்’ திரைப்படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ‘பகவந்த் கேசரி’, ‘குண்டூர்காரம்’ உள்ளிட்ட தெலுங்கு படங்களின் வெற்றியால் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

சமீபத்திய பேட்டியில் பேசிய ஸ்ரீலீலா, ரசிகர்களை நேரில் சந்திக்கும் நிகழ்வுகள் தனக்கு மிகவும் பிடித்தமானவை என்று கூறியுள்ளார். ரசிகர்களின் அன்பும் உற்சாகமும் தனக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதாகவும், அவர்களுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், தன்னைப் போன்ற கலைஞர்களின் பயணத்தை ரசிகர்களே உயர்த்துகிறார்கள் என்றும், அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தொடர்ந்து நல்ல திரைப்படங்களை தேர்வு செய்து நடிக்க விரும்புவதாகவும் ஸ்ரீலீலா தெரிவித்துள்ளார்.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading