அறிமுக இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீவஸ்டன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘சீ யூ’ என பெயரிடப்பட்டுள்ளது. கிஷன் தாஸ் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை ஏஆர் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் டி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. ஜுனம் இசையமைத்துள்ளார்.
‘ஆரோமலே’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற கிஷன் தாஸ் மற்றும் ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி முதல் முறையாக இணைந்துள்ள இந்தக் கூட்டணி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், சஞ்சனா ‘தக் லைப்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதுடன், சமீபத்தில் ‘பரிமளா அண்ட் கோ’ படத்திலும் நடித்திருந்தார்.
சமீபத்தில் நடிகர் ஆர்யா வெளியிட்ட ‘சீ யூ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், தற்போது இப்படத்தின் டைட்டில் டீசரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
