நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். அரசியல் மற்றும் ஆக்ஷன் அம்சங்கள் கலந்த இந்த படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
முதலில் பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்த இப்படம், பின்னர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் வெளியானது. ஆனால், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பரிசீலனைகளுக்குப் பிறகு படத்திற்கு ‘ஏ’ (A) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சில காட்சிகளை நீக்கவும், சிலவற்றை மாற்றியமைக்கவும் தணிக்கை வாரியம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக ஜூலை 24-ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஒரு நாள் முன்னதாகவே படம் ரிலீசாகிறது. மேலும், படத்தின் ஓட்ட நேரம் 183 நிமிடங்கள் (3 மணி நேரம் 3 நிமிடங்கள்) என கூறப்படுகிறது. இதனுடன், ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய டிரெய்லர் கட் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
—
