தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, அவரை பல்வேறு திரையுலக பிரபலங்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயனும் நேற்று முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்த சிவகார்த்திகேயன், மக்களின் மனங்களை மகிழ்விப்பதில் இருந்து மாநிலத்தை வழிநடத்தும் உயர்ந்த பொறுப்பை ஏற்றுள்ள முதல்வர் ஜோசப் விஜயை சந்தித்தது பெருமைக்குரிய தருணம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘ரசிகன் எக்ஸ்பிரஸ்’, ‘விஜய் விருதுகள்’ மேடை, ‘GOAT’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய தருணங்கள் முதல் தற்போது வரை தொடரும் சகோதரத்துவமும் பிணைப்பும் எப்போதும் சிறப்பானதாகவே இருக்கும் என்று நெகிழ்ச்சியுடன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
