மூன்று வயது தோற்றங்களில் நடிகரும் தயாரிப்பாளருமான கே.ஜே.ராஜேஷ்… ‘ரவுத்திரன்’ படத்திற்காக கடுமையான உடற்பயிற்சி!

தயாரிப்பாளர் கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ், ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த உற்சாகத்தில் தற்போது தனது அடுத்த திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.

ராஜேஷின் புதிய படத்திற்கு ‘ரவுத்திரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பிரசாந்த் பாண்டியராஜனின் உதவி இயக்குநரான ரீகன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் 25 வயது, 30 வயதுக்கு மேற்பட்ட தோற்றம் மற்றும் 50 வயது என மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் ராஜேஷ் தோன்றவுள்ளார். அதற்காக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு தனது உடல் தோற்றத்தை மாற்றி, மெருகேற்றி நடித்திருப்பதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading