ஞானபீட விருதால் கவுரவிக்கப்பட்ட கவிஞர் வைரமுத்து… தமிழ் இலக்கியத்திற்கு மீண்டும் தேசிய அங்கீகாரம்

தமிழ் திரையிசைப் பாடலாசிரியரும், எழுத்தாளருமான கவிஞர் வைரமுத்துவுக்கு நாட்டின் மிக உயரிய இலக்கிய அங்கீகாரமான ஞானபீட விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற பிரம்மாண்டமான விருது வழங்கும் விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் கரன் சிங், இந்த உயரிய விருதை வைரமுத்துவுக்கு வழங்கி சிறப்பித்தார்.

இந்தியாவின் பல்வேறு மொழி இலக்கிய ஆளுமைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டு, ஞானபீட விருது பெறும் 60-வது இலக்கியவாதியாக வைரமுத்து இடம்பிடித்துள்ளார். மேலும், தனது பிறந்தநாளன்றே இந்த உயரிய தேசிய விருதைப் பெற்றிருப்பது அவருக்கு கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. இதனுடன், கடந்த 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஞானபீட விருது பெறும் மூன்றாவது தமிழ் இலக்கிய ஆளுமை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக மறைந்த எழுத்தாளர்களான அகிலன் மற்றும் ஜெயகாந்தன் ஆகியோர் இந்த விருதால் கவுரவிக்கப்பட்டிருந்தனர்.

கவிஞர் வைரமுத்து ஏற்கனவே சிறந்த திரையிசைப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை ஏழு முறை பெற்றுள்ளார். அதோடு, கள்ளிக்காட்டு இதிகாசம் நூலுக்காக சாகித்திய அகாடமி விருதையும், பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு உயரிய தேசிய விருதுகளையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.1964-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்திய மொழிகளில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஞானபீட விருதுடன், ரூ.11 லட்சம் ரொக்கப் பரிசு, சரஸ்வதி தேவியின் வெண்கலச் சிலை மற்றும் இந்திய குடியரசுத் தலைவர் வழங்கும் பாராட்டுச் சான்றிதழும் இணைந்து வழங்கப்படுகின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading