பிரபல பாலிவுட் நடிகையான சாரா அலி கான், ‘கேதார்நாத்’, ‘லவ் ஆஜ் கல்’, ‘கேஸ் லைட்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.
தற்போது விடுமுறையை கொண்டாடுவதற்காக அவர் ஐரோப்பிய நாடான குரோஷியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அழகிய கடற்கரைகளை சுற்றிப்பார்த்து ஓய்வை அனுபவித்து வரும் சாரா அலி கான், தனது தோழிகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழித்து வருகிறார்.
இந்த சுற்றுலாவின் போது கடற்கரையில் பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
—
