இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள். வித்தியாசமான மற்றும் ஸ்டைலிஷ் ஆடைகளில் போட்டோஷூட் நடத்தி அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்வது அவரது வழக்கமாகும். குறிப்பாக அவரது ஃபேஷன் தேர்வுகள் மற்றும் கிளாமரான தோற்றத்திற்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
கிளாமரான ஆடைகளை அணிவதில் எந்த தயக்கமும் காட்டாத ஜான்வி கபூர், சமீபத்தில் வெளியான ‘பெத்தி’ தெலுங்கு திரைப்படத்திலும் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டார் என்ற விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.
இந்த நிலையில், நடிகை அகன்ஷா ரஞ்சன் கபூரின் திருமண விழாவில் ஜான்வி கபூர் அணிந்திருந்த தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட ஜாக்கெட், அதற்கு பொருத்தமாக அணிந்திருந்த ஸ்கர்ட் மற்றும் ஷால் ஆகியவை தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. அவர் அணிந்திருந்த அந்த பிரத்யேக தங்க ஜாக்கெட்டை மும்பையைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் சுஹானி பரேக் வடிவமைத்துள்ளார். ஜான்வியின் இந்த புதிய ஃபேஷன் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி, அவரது உடை அலங்காரம் குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர்.
