படப்பிடிப்பில் எனக்கான எல்லைகளை வெளிப்படையாக கூறுவேன் – கயாடு லோஹர் OPEN TALK!

கன்னடத்தில் வெளியான ‘முகில்பேட்டை’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கயாடு லோஹர். தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய ‘டிராகன்’ படத்தின் மூலம் அறிமுகமான அவர், தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

‘டிராகன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் இணைந்து நடித்த ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படமும் கயாடு லோஹருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. சமீபத்தில் வெளியான ‘இதயம் முரளி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், அடுத்ததாக ஜி.வி. பிரகாஷுடன் ‘இம்மார்டல்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ள புதிய திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் படப்பிடிப்பில் தனக்கான எல்லைகள் குறித்து கயாடு லோஹர் வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், “படப்பிடிப்பில் எனக்கு உடன்பாடு இல்லாத ஆடைகள் அல்லது காட்சிகள் இருந்தால், அதுகுறித்து இயக்குநர் மற்றும் படக்குழுவினரிடம் வெளிப்படையாக தெரிவித்துவிடுவேன். எந்த விஷயமாக இருந்தாலும் தயங்காமல் பேசுவது மிகவும் அவசியம்” என்று கூறியுள்ளார்.

மேலும், “ஒவ்வொரு நடிகருக்கும் தனிப்பட்ட எல்லைகள் உள்ளன. அந்த எல்லைகளை அனைவரும் மதிக்க வேண்டும். திறந்த மனதுடன் பேசுவதன் மூலமே பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான பணிச்சூழலை உருவாக்க முடியும். எனவே, நமக்கான எல்லைகளில் உறுதியாக இருப்பதுடன், நமது கவலைகளையும் வெளிப்படையாக தெரிவிப்பது மிகவும் முக்கியம்” என கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading