தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, சமீபத்தில் தனது கணவர் சோஹைல் கட்டாரியாவை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன்பிறகு ஆன்மிகப் பயணத்தில் ஈடுபட்டு வரும் அவர், தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் தனது தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து எழுந்த விமர்சனங்கள் தொடர்பாக ஹன்சிகா மனம் திறந்து பேசியுள்ளார். “பிரபலங்கள் என்றாலே அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது.
ஆனால், பிரபலங்களுக்கும் மனம் இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையில் கடினமான காலகட்டத்தை கடந்து செல்லும் போது அவர்கள் எந்த மனநிலையில் இருப்பார்கள் என்பதையும் உணர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
—
