தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ‘கர’ திரைப்படத்தைத் தொடர்ந்து, ‘அமரன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஓம்’ திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆடேக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த ஆக்ஷன் திரைப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், மம்முட்டி மற்றும் பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் வெளியான டைட்டில் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனுஷ் – மம்முட்டி இணைந்து வரும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன. இதையடுத்து, இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் தனது அடுத்த திரைப்படத்தில் தனுஷ் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
—
