மாதவனின் ‘ஜிடிஎன்’… முதல் பாடலை வெளியிட்ட படக்குழு!

நடிகர் மாதவன் நடித்துள்ள ‘ஜிடிஎன்’ திரைப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ‘ராக்கெட்ரி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, புகழ்பெற்ற தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் மாதவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ள இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில், ஜி.டி. நாயுடுவாக மாதவன் நடித்துள்ளார். படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவாகியுள்ள “The Rise of GTN” என்ற முதல் பாடலை படக்குழு நேற்று (ஜூலை 8) மாலை வெளியிட்டுள்ளது.ஏற்கெனவே வெளியாகியிருந்த ‘ஜிடிஎன்’ திரைப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள முதல் பாடலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading