ரொமான்டிக் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் கீர்த்தி ஷெட்டி!

தமிழில் ‘வா வாத்தியார்’, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லவ்வர் பாய்’ படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். இதையடுத்து, தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கத்தில் நந்தமூரி கல்யாண் ராமுடன் ‘ஜனவரி 12 விடுதலை’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ரொமான்டிக் திரைப்படம் மூலம் கீர்த்தி ஷெட்டி பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். திருப்பதி கோவிலுக்குச் சென்று வெங்கடேசப் பெருமானின் ஆசி பெற்ற பிறகு, படக்குழுவினர் இப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் மூலம், தயாரிப்பாளர் ரோகித் ஷெட்டியிடம் 17 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய விதி கோத்கோண்கர் இயக்குநராக அறிமுகமாகிறார். அபிஷேக் எஸ். வியாஸின் ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading