‘ரணபாலி’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!

ராகுல் சங்கிருத்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரணபாலி’. இதில் ‘மம்மி’ உள்ளிட்ட படங்களில் நடித்த அர்னால்ட் வோஸ்லூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அஜய் – அதுல் இசையமைத்துள்ளனர்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ‘ரணபாலி’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading