‘ஹாப்பி பர்த்டே லூசி’ படத்தை இயக்கிய எஸ்.எம். முகமது அசாருதீன் இயக்கி, தயாரித்து வரும் புதிய திரைப்படம் ‘அலப்பறை கிளப்புறோம்’. இந்த படத்தில் விக்ரம் சுந்தர், நரேஷ், சஞ்சீவ் சீனிவாஸ், ஹரி விஜய், கிரிதர், ஹரிஷ், கைலாஷ் உள்ளிட்ட புதுமுகங்கள் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். ஜனனி, சிவரஞ்சனி, அனுப்பியங்கா, சுமியா, மாலினி தனா, சுகன்யா, நந்தினி ஆகிய ஏழு புதுமுக நடிகைகள் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு மோனிஷ் மற்றும் ஹய்டு கார்த்திக் இசையமைத்துள்ளனர். ஐயப்பன் மற்றும் பாலகுரு இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
படம் குறித்து பேசிய இயக்குநர் எஸ்.எம். முகமது அசாருதீன், “காதல், காமெடி, சென்டிமென்ட் ஆகியவற்றை இணைத்த முழுநீள பொழுதுபோக்கு திரைப்படமாக ‘அலப்பறை கிளப்புறோம்’ உருவாகியுள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
—
