சவுரவ் கங்குலி பயோபிக் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரிலீஸ் தேதியையும் அறிவித்த படக்குழு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ரசிகர்களால் “தாதா” என செல்லமாக அழைக்கப்படுபவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை, ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ என்ற பெயரில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் கங்குலியாக ராஜ்குமார் ராவ் நடிக்க, விக்ரமாதித்யா மோத்வானே இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. சவுரவ் கங்குலியின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 2002-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான நாட்வெஸ்ட் டிராபி வெற்றிக்குப் பிறகு, லார்ட்ஸ் மைதானத்தில் ஜெர்சியை கழற்றி சுழற்றி கொண்டாடிய கங்குலியின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமே போஸ்டராக இடம்பெற்றுள்ளது.

இளம் கிரிக்கெட் வீரராக இருந்து, இந்தியாவின் மிகச் செல்வாக்கு மிக்க கேப்டன்களில் ஒருவராக உயர்ந்த சவுரவ் கங்குலியின் பயணத்தை இப்படம் பதிவு செய்கிறது. இந்திய கிரிக்கெட்டில் அவர் ஏற்படுத்திய மாற்றம், விடாமுயற்சி, தலைமைத்துவம் மற்றும் ஒரு தலைமுறையை ஊக்குவித்த அவரது பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது. மேலும், ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ திரைப்படம் 2027 மே 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. ஹிந்தியில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading