‘கிரீடம்’ ரீ ரிலீஸ்… நெகிழ்ச்சியுடன் தனது அனுபவங்களை பகிர்ந்த மோகன்லால்!

மலையாள சினிமாவில் மோகன்லால் நடிப்பில் 1989-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கல்ட் கிளாசிக் திரைப்படமான ‘கிரீடம்’, 37 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு, வருகிற ஜூலை 10-ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. சிபி மலயில் இயக்கிய இந்தப் படத்திற்கு லோகிததாஸ் கதை எழுதியிருந்தார்.

படத்தின் பிரீமியர் காட்சியில் கலந்து கொண்ட மோகன்லால், விழாவில் உரையாற்றியபோது, இப்படம் போன்ற ஒரு படைப்பை உருவாக்கிய அந்தக் காலத்து அற்புதமான கலைஞர்களில் பலர் இன்று நம்முடன் இல்லை என்பதால் மனம் கனக்கிறது என்று உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார்.

அவர் குறிப்பிட்டதுபோல், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த திலகன், கொச்சின் ஹனீபா, முரளி, கவியூர் பொன்னம்மா, மாமுக்கோயா, ஒடுவில் உன்னிகிருஷ்ணன், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த மோகன்ராஜ் மற்றும் கதையாசிரியர் லோகிததாஸ் உள்ளிட்ட பலர் தற்போது உயிருடன் இல்லை என்பது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading