மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள ‘டிரைன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் இந்தப் படத்தின் அடுத்த அப்டேட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பில் உள்ளது. பெரும்பாலான காட்சிகள் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டுள்ளதால், கிராபிக்ஸ் மற்றும் பிற தொழில்நுட்ப பணிகள் நிறைவடைய அதிக காலம் எடுத்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், இந்த ஆண்டு தொடக்கத்திலும் ரிலீஸாகும் என தகவல் வெளியானது. ஆனால் தற்போது இசை வெளியீட்டு விழாவே நடைபெற உள்ளது. சென்னை நடைபெறும் இந்த விழாவில் பாடல்கள் மற்றும் டீசர் வெளியிடப்படுவதுடன், படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
—
