‘பென்ஸ்’ படத்தின் 50% படப்பிடிப்பு நிறைவு… வெளியான முக்கிய அப்டேட்!

லோகேஷ் கனகராஜின் ‘Lokesh Cinematic Universe (LCU)’ கதைக்களத்தின் கீழ் உருவாகி வரும் ‘பென்ஸ்’ திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ரெமோ’ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. நம்பத்தகுந்த தகவல்களின் படி, மொத்த படப்பிடிப்பில் 50 சதவீத காட்சிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் நடிகர் ரவி மோகன் சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு, அவர்களது பகுதிக்கான படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதில் நிவின் பாலி ‘வால்டர்’ என்ற மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அந்தக் கேரக்டர் ப்ரோமோ ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலானது. அதேபோல், நடிகர் ரவி மோகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது அடுத்த கட்டப் படப்பிடிப்பு, ராகவா லாரன்ஸ் நடிக்கும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை மையமாக வைத்து நடைபெற உள்ளது. G Squad, Passion Studios மற்றும் The Route நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்கிறார். பிலிமின் ராஜ் படத்தொகுப்பையும், கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவையும் மேற்கொண்டு வருகின்றனர். பாதி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால், விரைவில் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading