உலகின் மிகப் பழமையான மற்றும் மதிப்புமிக்க டென்னிஸ் தொடரான விம்பிள்டன் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளை நேரில் காண இந்திய திரையுலக மற்றும் விளையாட்டு பிரபலங்கள் பலரும் லண்டனுக்கு சென்று ரசித்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை கல்யாணி பிரியதர்ஷனும் தற்போது விம்பிள்டன் போட்டிகளை நேரில் காண சென்றுள்ளார். அவரை வரவேற்று விம்பிள்டன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. விம்பிள்டன் கோப்பையை கையில் ஏந்தியதும், சென்டர் கோர்ட்டில் எடுத்த புகைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த மலையாள திரைப்படமான ‘லோகா’ மூலம் உலகளவில் கவனம் பெற்ற கல்யாணி பிரியதர்ஷன், தற்போது விம்பிள்டன் போன்ற உலகப் புகழ்பெற்ற விளையாட்டு மேடையில் சிறப்பு விருந்தினராக வரவேற்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
