37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் மோகன்லாலின் ‘கிரீடம்’… கிளைமாக்ஸை மாற்ற மறுத்த இயக்குனர்!

மலையாள சினிமாவின் சிறந்த கல்ட் கிளாசிக் படங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ‘கிரீடம்’ திரைப்படம் வெளியாகி இன்று (ஜூலை 7) 37 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1989-ஆம் ஆண்டு சிபி மலயில் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு மறைந்த இயக்குநர் லோகிததாஸ் திரைக்கதை எழுதியிருந்தார். போலீஸ் வேலைக்கு ஆசைப்படும் இளைஞனின் வாழ்க்கை, எதிர்பாராத சம்பவத்தால் எப்படி மாறுகிறது என்பதை உணர்வுபூர்வமாகச் சொன்ன இந்தப் படம், 100 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

37-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ‘கிரீடம்’ திரைப்படம் டிஜிட்டல் தரத்தில் புதுப்பிக்கப்பட்டு, வரும் ஜூலை 10-ஆம் தேதி கேரளா முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதனால் மோகன்லால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

படம் வெளியானபோது சோகமான கிளைமாக்ஸ் காரணமாக வணிகரீதியில் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. கிளைமாக்ஸை மாற்றுமாறு பலரும் ஆலோசனை கூறியபோதும், கதாசிரியர் லோகிததாஸ் தனது கதையின் முடிவை மாற்ற மறுத்தார். இறுதியில், அவரது நம்பிக்கையே வெற்றி பெற்று, ‘கிரீடம்’ மலையாள சினிமாவின் காலத்தால் அழியாத கிளாசிக் படமாக மாறியது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading