கமலின் 237-வது படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஏன்? வெளியான புது தகவல்கள்!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘தக் லைப்’ படத்தைத் தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது 235-வது படத்தை பா. ரஞ்சித், 236-வது படத்தை நெல்சன் இயக்குவார்கள் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தாலும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையில், கமலின் 237-வது படத்தை பிரபல சண்டைப் பயிற்சியாளர்களான அன்பறிவ் சகோதரர்கள் இயக்கவுள்ளதாக ராஜ் கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப் படம் டீ-ஏஜிங் தொழில்நுட்பம் மற்றும் ஏஐ பின்னணியில் உருவாகும் பிரம்மாண்ட அறிவியல் புனைகதை படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளுக்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்று, படக்குழுவினருடன் ஆலோசனை நடத்தியதுடன், ஏஐ தொடர்பான பயிற்சியையும் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. கடந்த ஆண்டே படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அது தொடர்ந்து தள்ளிப்போனது.

தற்போது, படப்பிடிப்பு தாமதத்திற்கு முக்கிய காரணம் படத்தில் இடம்பெறும் அதிகளவிலான அனிமேஷன் மற்றும் ஏஐ காட்சிகளுக்கான கிராபிக்ஸ் பணிகள் என கூறப்படுகிறது. தரத்தில் எந்த சமரசமும் செய்ய விரும்பாத படக்குழு, இரண்டு முன்னணி சர்வதேச CGI ஸ்டூடியோக்களுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அந்த பணிகள் நிறைவடைந்ததும், படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading