சமந்தாவின் புதிய அத்தியாயம்… சோனி லைவ் உடன் கைகோர்ப்பு!

நடிகை சமந்தா நடிப்பில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி வெளியான ‘மா இன்டி பங்காரம்’ (தமிழில் ‘எங்கள் தங்கம்’) திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நந்தினி ரெட்டி இயக்கிய இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். சமந்தாவுடன் இணைந்து அவரது கணவர் ராஜ் நிடிமொரு தயாரிப்பாளராகவும், கதையாசிரியராகவும் பணியாற்றியிருந்தார்.

படத்தின் வெற்றி விழாவில் சமந்தா கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தியதுடன், சில காலம் ஓய்வெடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சோனி லிவ் தமிழ் தளத்துடன் சமந்தா இணைவதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் வெப் தொடரில் நடிக்கிறாரா அல்லது புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து சமந்தா வெளியிட்டுள்ள பதிவில், “மாற்றங்களை ஏற்றுக்கொண்டு புதிய தொடக்கங்களை வரவேற்க இந்த ஆண்டு எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது. சோனி லிவ் தமிழுடன் புதிய அத்தியாயத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் சுவாரஸ்யமான ஒன்றுக்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். அதன் விவரங்களை விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading