மலையாள சினிமாவில் நடிகைகளின் குரல்கள் வெளியில் பெரிதாக கேட்பதில்லை – நடிகை பார்வதி திருவோத்து!

மலையாள நடிகை பார்வதி திருவோத்து, சமூக பிரச்சினைகள் மற்றும் சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் அநீதிகள் குறித்து தொடர்ந்து துணிச்சலாகக் குரல் கொடுத்து வருபவர். குறிப்பாக, சினிமா பெண்கள் நல அமைப்பின் மூலம் பெண்களின் உரிமைகளுக்காக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.

கடந்த ஆண்டு வெளியான ஹேமா கமிஷன் அறிக்கைக்கு பிறகு மலையாள சினிமாவில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவை உண்மையான அக்கறையால் வரவில்லை என்று பார்வதி தெரிவித்துள்ளார். பொதுமக்களின் கண்டனமும், ஊடகங்களின் விமர்சனங்களும் அதிகரித்ததால் மட்டுமே இந்த மாற்றங்கள் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், மலையாள சினிமாவில் இன்னும் ‘ஹீரோ வழிபாடு’ நீடிப்பதாகவும், சூப்பர் ஸ்டார்களை யாரும் கேள்வி கேட்க முடியாத சூழல் நிலவுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்ற நிலை அதிகாரம் மிக்கவர்களுக்கு புதுமுகங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.சீர்திருத்தங்கள் மெதுவாக நடந்தாலும், பெண்கள் நல அமைப்பின் போராட்டம் எந்த சூழலிலும் பின்வாங்காது என்றும் பார்வதி உறுதிபட தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading