இசைஞானி இளையராஜா குடும்பத்தில் இருந்து புதிய ஹீரோ… ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணனும் தயாரிப்பாளருமான ஆர்.டி. பாஸ்கரின் மகன் ஜெயன், ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்திற்கு இயக்குநர் வெங்கட் பிரபு கதை எழுதியுள்ள நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். திரைக்கதை மற்றும் இயக்கத்தை சுஜித் என். சுப்ரமணியம் மேற்கொள்கிறார். ElephantineX நிறுவனத்தின் சார்பில் ரமணன் பாலகங்காதரன் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

இசைக் குடும்பத்தில் இருந்து நடிகராக அறிமுகமாகும் ஜெயனின் முதல் படம் என்பதாலும், வெங்கட் பிரபு – யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இணைந்திருப்பதாலும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading