ஜூனியர் என்டிஆர்-ஐ இயக்கும் நெல்சன்? உறுதிப்படுத்திய தயாரிப்பாளர் நாக வம்சி!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. இப்படம் அக்டோபர் மாதம் 15ல் வெளியாகிறது. இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் – நெல்சன் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்ற தகவல் கடந்த ஆண்டே வெளியானது.

ஆனால் சமீபத்தில் அந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆருக்குப் பதிலாக நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவின.

இந்த நிலையில், தயாரிப்பாளர் நாக வம்சி அளித்துள்ள பேட்டியில், “நெல்சன் எனது மிகவும் பிடித்த இயக்குநர்களில் ஒருவர். ஜூனியர் என்டிஆர் படத்திற்காக முன்பணம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. என்டிஆர் தேதிகள் கிடைத்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் நெல்சன் – ஜூனியர் என்டிஆர் கூட்டணி உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading