சூர்யா வெளியிட்ட ‘அருள்வான்’ டிரெய்லர்… மலைக்கிராம சிறுமியின் கல்விப் போராட்டம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அருள்நிதி, இயக்குநர் கணேஷ் விநாயக் இயக்கத்தில் உருவாகியுள்ள அருள்வான் திரைப்படத்தில் நடித்துள்ளார். தகராறு படத்திற்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரம்யா பாண்டியன், ஆரவ், காளி வெங்கட், கிருத்திகா, ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை 90 பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் அல்லிபூவே பாடல் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், அருள்வான் திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். மலைக்கிராம மக்களின் வாழ்க்கையையும், கல்விக்காக போராடும் ஒரு சிறுமியின் உணர்வுபூர்வமான பயணத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் வரும் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading