‘விஸ்வநாத் & சன்ஸ்’ 200% பிளாக்பஸ்டர்… தயாரிப்பாளர் நாக வம்சி உறுதி!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான கருப்பு படத்தைத் தொடர்ந்து, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

சூர்யாவின் 46-வது படமாக உருவாகியுள்ள இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், படத்தை முழுமையாக பார்த்த தயாரிப்பாளர் நாக வம்சி, ‘விஸ்வநாத் & சன்ஸ் 200 சதவீதம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர். இது முழுமையான குடும்பத் திரைப்படம். திரையரங்குகளில் ரசிகர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள். படம் மிகப்பெரிய அளவில் வெளியாக உள்ளது’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading