நடிகர் நாகார்ஜூனா தனது மகனும் டோலிவுட் நடிகருமான அக்கில் அக்கினேனியின் லெனின் படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவில், தனது 100-வது திரைப்படமான கிங் 100 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூலை 10-க்கு பிறகு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இந்த படம் குறித்து சமீபத்தில் வெளியான தகவல்களின்படி, இந்தப் படத்தில் நடிகை தபு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நாகார்ஜுனாவுக்கு எதிராக முக்கிய நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பார் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரா. கார்த்திக் இயக்கும் கிங் 100 திரைப்படம், ஏழ்மையில் இருந்து மிகப்பெரிய பணக்காரராக உயர்ந்து வரும் ஒருவரின் வாழ்க்கையையும், தந்தை–மகள் உறவின் உணர்வுபூர்வமான பின்னணியையும் மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நாகார்ஜுனா, தபு மற்றும் சுஷ்மிதா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜூலை 10-க்கு பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நாகார்ஜுனா உறுதியளித்துள்ள நிலையில், தபுவின் கதாபாத்திரம் குறித்த தகவல் உண்மையா என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
—
