மோகன்லால் – திலீஷ் போத்தன் கூட்டணியில் உருவாகும் ‘நெடுங்கண்டம் மிராக்கிள்’!

‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நடிகர் மோகன்லால் பல புதிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது தருண் மூர்த்தி இயக்கும் ‘அதி மனோகரம்’ படத்தில் நடித்துவரும் அவர், சத்யன் அந்திக்காடு மற்றும் மேஜர் ரவி இயக்கங்களிலும் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், இயக்குநர் திலீஷ் போத்தன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கவிருக்கும் புதிய படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘நெடுங்கண்டம் மிராக்கிள்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டம் நகரத்தை பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்திற்கு ஷ்யாம் புஷ்கரன் மற்றும் பால்சன் ஸ்காரியா இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். திலீஷ் போத்தன் – ஷ்யாம் புஷ்கரன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading