‘ஸ்பைடர்மேன்’ பட புரோமோவில் நடிக்க மெஸ்ஸிக்கு 143 கோடி சம்பளமா?

‘ஸ்பைடர்மேன்’ படத்தின் புரோமோ வீடியோ ஒன்றையும் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ளது. 39 வினாடிகள் கொண்ட இந்த புரோமோ வீடியோவில் கால்பந்து வீரர் மெஸ்ஸி நடித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 39 வினாடிகள் கொண்ட புரோமோ வீடியோவில் வெறும் 5 வார்த்தைகள் மட்டுமே பேசியுள்ள மெஸ்ஸிக்கு சம்பளமாக 15 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 143 கோடி) வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. இருப்பினும், மெஸ்ஸிக்கு ரூ. 143 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக படத் தயாரிப்பு நிறுவனமோ மெஸ்ஸியின் தரப்பிலோ உறுதிப்படுத்தப்பட்ட எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading