மமிதா பைஜூ எனக்கு ஒரு அற்புதமான குழந்தையைப் போன்றவர்… நடிகை ஐஸ்வர்யா லட்சுமி டாக்!

தென்னிந்திய சினிமாவில் மிக வேகமாக முன்னேறி வரும் இளம் நடிகைகளில் ஒருவராக மமிதா பைஜூ திகழ்ந்து வருகிறார். அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ந்து கிடைத்து வரும் வளர்ச்சியைப் பார்ப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். மிகக் குறுகிய காலத்திலேயே மமிதா பைஜூ அடைந்திருக்கும் இந்த அசுர வளர்ச்சி, ஒரு சக நடிகையாக தனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, “மமிதா பைஜூ எனக்கு ஒரு குழந்தையைப் போன்றவர். அவர் மிகவும் அற்புதமாக நடிக்கக்கூடிய திறமையான நடிகை. சூர்யா சாருடன் அவர் நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் ரீல்ஸ் வீடியோக்களை நான் பார்த்தேன். அதில் மமிதா மிகுந்த நேர்த்தியுடனும், அழகாகவும் நடனமாடியிருந்தார். அதை பார்ப்பதே மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. சினிமா துறையில் இதுபோன்ற பெரிய வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஒருவருக்கு அத்தகைய வாய்ப்பு கிடைத்தால், அதை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தனது திறமையை நிரூபிக்க வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இன்று சினிமாவில் மிகப்பெரிய பிரபலமாக வளர்ந்து கொண்டிருந்தாலும், மமிதா இன்னும் மிகவும் எளிமையான மனிதராகவே இருக்கிறார். படப்பிடிப்பு தளத்திற்கு வருவார், தனக்கான வேலையை முழு கவனத்துடன் செய்து முடிப்பார், பின்னர் அமைதியாக கிளம்பிச் செல்வார். அங்கு பணிபுரியும் அனைவரிடமும் மிகவும் அன்பாகவும் மரியாதையாகவும் பழகுவார். அவரிடம் எந்தவிதமான நட்சத்திர ஆடம்பர மனப்பான்மையும் இல்லை. மமிதாவிடம் எனக்கு மிகவும் பிடித்த குணம் அதுதான்,” என்று ஐஸ்வர்யா லட்சுமி மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading